Friday, May 20, 2022

அதிகாரத்தின் 48 விதிகள் (The 48 Laws Of Power)

  1. உனக்கு மேலிருப்பவன் போட்ட கோட்டை தாண்டாதே.
  2. நண்பர்களை நம்பாதே; இந்நாள் நண்பனைவிட முன்னாள் எதிரி களத்தில் அதிகம் பயன்படுவான்
  3. உன் நோக்கத்தை மறை. ஒரு பாதையில் போவதுபோல சைகை காட்டி, மறு பாதையில் பயணம் செய்.
  4. தேவைக்கும் குறைவாக பேசு.
  5. உண்மையை விட உனது பிம்பமே பெரியது. உயிர் கொடுத்தாவது அதை காப்பாற்று. எதிரிகளின் பிம்பங்களை உடைத்தெறி.
  6. எந்நேரமும், அனைவர் கவனமும் உன்னிடமே இருக்கட்டும். நீ கூட்டத்தில் தனித்து தெரிவதற்கு ஏற்பாடுகள் செய்.
  7. தேவையான வேலைகளை மற்றவர்கள் முடிக்கட்டும். பெயரை நீ தட்டிச்செல்.
  8. யாரையும் தேடிப்போகாதே. அவர்கள் உன்னை தேடி வரட்டும். அவர்களுக்கு உதவு; பிறகு பலியாக்கு
  9. செயலில்தான் வெற்றிவேண்டும். வாக்குவாதத்தில் அல்ல.
  10. அதிர்ஷ்டம் கெட்டவர்கள், சோர்வானவர்களை சேர்த்துக்கொள்ளாதே. உனது தரப்பிலிருந்து வெளியேற்றி விடு.
  11. உன்னை சுற்றியிருப்பவர்களை "உன்னை அண்டி இருந்தால்தான் வாழ்க்கை" என்ற நிலையிலேயே வைத்திரு.
  12. குறைவான நேர்மை, அளவான கருணை - உன் பலிக்கடாவுக்கு இதுவே போதும். அதிக அன்புடன் நடந்து கொள்ளாதே.
  13. எப்பொழுதும் மக்களின் தேவை பூர்த்தி அடைவதைப் பற்றியே பேசு. உனது தேவை அதாகவே பூர்த்தியடையும்
  14. மற்றவர்களிடம் நண்பனை போல தோற்றம் கொள்; ஆனால் ஒற்றனை போல் பின் தொடர்.
  15. எதிரியை பூண்டோடு அழி. தீயில் மிச்சம், மீதி எதுவும் வைக்காதே
  16. அவ்வப்போது கண் மறைவாய் இருந்துகொள். தேட விடு. மக்களிடையே மதிப்பு கூடும்.
  17. மக்களை ஒரு நிலைத்த பயத்தில் வை. யாரும் யூகிக்க முடியாதபடி நடந்து கொள்.
  18. பாதுகாப்பு என்றெண்ணி உன்னை சுற்றி கோட்டையை எழுப்பிவிடாதே. தனிமைப்பட்டால் உனக்குத்தான் ஆபத்து
  19. பலவீனமானவர்களை பதம் பார். உறுதியானவர்களிடம் உரசிக் கொள்ளாதே
  20. இருதரப்பையும் மோதவிடு. எந்த தரப்புக்கும் உண்மையாக இருக்காதே.
  21. உன்னை விட புத்திசாலியாக இருப்பதாக உன் பலிகடாவை நினைக்க விடு. உன் நோக்கத்தை காட்டாதே.
  22. உனது பலவீனமான தருணத்தில் சரணடை. பின் அந்த சரணையே வெற்றியாக திரித்துக் காட்டு. பலவீனத்தை பலமாக மாற்றி காட்சிப்படுத்து.
  23. ஒரு மாபெரும் பிரச்சனையை மையபுள்ளியாக உருவகப்படுத்து. அதைச் சுற்றி உன் வியூகத்தை அமைத்துக்கொள்.
  24. அதிகார சபையில் அகட விகடம் பண்ணு. மந்திரிகளில் தந்திரியாக இரு.
  25. உன் பிம்பத்தை நீயே உருவாக்கு. மக்கள் விரும்பும் பாவனைகளை உனது கைகள் செய்யட்டும். அதைப்பார்த்து உன் பிம்பத்தை அவர்கள் நம்பிவிடுவார்கள்.
  26. உன் கரங்கள் கறையில்லாமல் இருக்கட்டும். தவறுகள் செய்ய தனி அணியை அமைத்துக் கொள் .
  27. ஒரு மூட நம்பிக்கையை உருவாக்கி மக்களிடம் கொடு. பின்னர் அதை சுற்றி வார்த்தைகளால் ஜாலம் காட்டிக்கொண்டே இரு.
  28. அதிரடியாக காரியம் செய். தவறில் முடிந்து விட்டதா? மேலும் அழிச்சாட்டியமாக நடந்து கொள். தைரியசாலியென்று மக்கள் பிரமிப்பார்கள்.
  29. ஒரு காரியம் ஆரம்பிக்கும் போது, அதன் முடிவு வரை உன் திட்டம் இருக்கவேண்டும்.
  30. உன் சாதனைகளை எளிதில் அடைந்ததைப்போல காட்டிக்கொள். பட்ட வேதனைகளை மக்களிடம் மறைத்து விடு.
  31. உன் பலிக்கடாக்களுக்கு பல சோதனைகளை கொடுத்து விளையாடு. வேதனைகளில் ஒன்றை தெரிவு செய்யும் நிலையிலேயே அவர்கள் இருக்கட்டும்.
  32. மக்கள் கூட்டத்துக்கு உண்மை கசக்கும்; பொய் இனிக்கும். அவர்களுக்கு கற்பனைகளை அள்ளிவீசு. கெட்டியாக பிடித்துக்கொள்ளுவார்கள்.
  33. எதிரி, நண்பன் - இருவரின் வெளியில் தெரியாத குறைகளை மறைவாக கண்டுபிடி. தேவைப்படும்போது அவர்களுக்கெதிராக உபயோகப்படுத்து.
  34. மன்னனை போல தோற்றம் கொள். பாவனை பண்ணு., உடையணி. மகுடம் ஏந்து. மக்கள் உன்னை மன்னனாகவே ஏற்றுக்கொள்ளுவார்கள்.
  35. பொறுமை காத்துக்கொள். தருணம் பார். சரியான சமயத்தில் நொறுக்கியடி.
  36. உன் தவறினை மறை. எதிரியை மதியாதே.
  37. பெரிய சைகைகள், மேடை பாவனைகள், மயக்கும் கற்பனைகள் - மக்கள் இதையெல்லாம் உன் சக்தியின் பிரகாசமாக நம்புவார்கள்.
  38. பொது ஜனத்தின் மனசாட்சியைப் போலவே பேசு; நடி. ஆனால் உன் மனம் போல செயல்படு .
  39. அமைதி காத்துக்கொள். ஆனால் எதிரியை கலவரப்படுத்து. குட்டையை குழப்பு. மேலே வரும் மீனை பிடி
  40. பணத்தை சுழற்றி அடி. நீ செலவழிப்பதெல்லாம் உன்னிடத்தில் அதிகாரத்தை ஈர்த்து வரும் காந்தமாக இருக்கும்.
  41. ஒரு மாமனிதனுக்கு பிறகு நீ பதவியேற்க நேர்ந்ததா. அவன் பிம்பத்தை சீரழித்து விடு. உன் பிம்பத்தை அதைவிட பெரிதாக்கு.
  42. எதிரி கூட்டத்தில் வல்லவனை கண்டுபிடி. ஒழித்துக்கட்டு. செம்மறியாட்டு கூட்டம் போல எதிரிகள் சிதறி ஓடட்டும்.
  43. மக்கள் கூட்டத்துக்கு பிடித்த ஒரு விஷயத்தை கண்டுபிடி. தொடர்ந்து அதையே பேசு.
  44. எதிரிகள் செயலை முகம் பார்க்கும் கண்ணாடி போல் அப்பிடியே பிரதிபலித்து நடந்துகொள். அவர்கள் குழம்பி போய் தவறு இழைக்க ஆரம்பித்து விடுவார்கள்
  45. அதிரடி சீர்திருத்தங்கள் மக்களை உனக்கெதிரான புரட்சியில் தள்ளி விட்டு விடும். எந்த நேரமும் மாறுதல்களையும், முன்னேற்றத்தையும் பற்றியே பேசு. ஆனால் எதையும் கொஞ்சமாக செய்தால் போதும்.
  46. உனது சிறு தவறுகள் குறித்து பொதுவெளியில் வருந்து. அனுதாபம் தேடு. பெருந்தவறுகளை மக்கள் கண்ணில் காட்டாதே.
  47. உன் நோக்கத்தின் எல்லையை குறித்து வைத்துக்கொள். வெற்றிக்கோட்டை தாண்டி போகாதே. எங்கே நிற்க வேண்டும் என்று தெரிந்து அங்கேயே நில்.
  48. எதிலும் உறுதியான நிலைப்பாட்டை எடுக்காதே. குடுவைக்கேற்ற தண்ணீர் போல இடத்திற்கேற்றார் போல மாறிக்கொண்டே இரு.

No comments: