Friday, May 20, 2022

வாழ்க்கைல எது சந்தோஷம்?

  வாழ்க்கைல எது  சந்தோஷம்?


நீங்கலாம் சந்தோஷமாவா இருக்கீங்க?

இந்த சமுதாயம் சொல்லிகுடுற மாறி

வாழ்ந்தா சந்தோஷமா வாழ முடியுமா?

அப்டி என்ன சொல்லி குடுக்குது இந்த சமுதாயம்?


பொய் சொல்லாத,

தப்பு பண்ணாத,

எதுவும் கேள்வி கேக்காத,

எல்லா பாரத்தையும் கடவுள்

மேல இறக்கி வை.


இதெல்லாத்தையும் ப்பாலோவ் பண்ணா…..


பண்ணா நம்ம சந்தோஷமா வாழ முடியுமா?


இந்த சமூகத்துல நம்ம சந்தோஷமா

வாழனும்ணா இந்த விதிகள் மட்டும் பாலோவ்

பண்னா மட்டும் பாத்தது..


அதைவிட முக்கியமா

ஒரு பொறுப்பு இருக்கு. ஒரு குடும்பம்,

2 கொழந்தைங்க, ஒரு அழகிய குடும்பம்,

மாச சம்பளத்துக்கு ஒரு வேலை,

3 வேள சாப்பாடு.. ஒரு சொந்த வீடு,

ஒரு சாதரண டிவி,

அதுவாங்கியாச்சினா

ஒரு எல்சிடி,

அதுவும் வாங்கியாச்சினா

ஒரு எல்இடி,

அதுவும் வாங்கியாச்சினா

பத்தாததுக்கு ஒரு ஹோம் தியேட்டர்..


முடிஞ்சா ஒரு கார்..

முடிஞ்சா அத விட

பெரிய கார் அதுவும் வந்துருச்சின்னா வீட்ல

மூனு கார் .........

பசங்களுக்கு ஒரு

ஸ்கூல் கண்டிப்பா அரசு பள்ளில சேக்க

கூடாது...ஒரு பிரைவெட் ஸ்கூல்.. கண்டிப்பா

இங்கிலீஸ் மீடியம் .. "டிஏவி" ஓ "டான் போஸ்கோ" ஓ..



ஒரு வாரத்துல பீச்,

இல்லைனா ஹோட்டல்,

இல்லைனா ஷாப்பிங் மால்,

இல்லேனா ஒரு படத்துக்கு கூட்டிட்டு போனும், நல்ல தியேட்டர்ல.

அங்க போனா 120 ரூவா…..

என்ன ____படம்

எடுக்குரானுங்க??? ..


ஒரு குடும்பம் 1000 ரூவா செலவு பண்ணி ஒரு படத்துக்கு போனா, அந்த படத்துல எதாவது இருக்கணும்ல??

ஒரு மண்னாங்கட்டியும் இருக்காது.

ஆனா நீ அந்த

படத்த பாத்துதான் ஆகணும்..

ஏன்னா அதுதான் விதி..

இத தவிர்த்து தேவப்படும்

போதெல்லாம் ஆடை, செருப்பு, துணிமணி....

நீ எவ்ளோ வேணா வாங்கலாம் வாங்கலாம்னுலாம்

கெடையாது வாங்கிதான் ஆகணும்..


நீ என்ன வாங்கனுனு உக்காந்து யோசிக்கலாம் தேவை இல்ல


உன்ன சுத்தி நீ நின்னாலோ, நடந்தாலோ, பஸ் க்கு வெயிட் பண்னாலோ, எங்க திரும்பினாலோ, டிவி, ரேடியோ, பேப்பர், இன்டர்நெட், மொபைல், ரோடு .. ரோடு முழுக்க கடை... கடை முழுக்க விளம்பரம்.. விளம்பரம் முழுக்க தள்ளுபடி, சலுகை,...சேல் சேல் சேல்... முந்துங்கள் முந்துங்கள் முந்துங்கள்....


ஆடி ஆஃபர் ல ஆடி போவிங்க ஆடி. ..


இங்க ஒரெ ரூல் தான்... பணம்.


இந்த சமூகம் என்ன சொல்லுது??


நீ பணக்காரனா இருந்தா உன்ன மதிப்பேன்


இல்லேனா உன்ன மதிக்கமாட்டேன்.. சிம்பிள்.

நீ எங்க வேணா வேல செய், எவன வேணா

சொரண்டி தின்னு, காக்கபிடி, அடிமையா

இரு, ஊழல் பண்ணு, லஞ்சம் வாங்கு, குத்து,

அடி, மெரட்டு, கொல பண்ணு, ரேப் பண்ணு,

எத்தன பேர் வயித்துல வேணா மிதி..,

எத்தன பேரனாலும் முட்டாள் ஆக்கு...,

பல்லயிரக்கணக்கான இலட்சக்கணக்கான

கொடிக்கணக்கான பணத்த வேணா கொள்ள அடி

யாரும் தூங்கி போட்டு மிதிக்க மாட்டாங்க.


இந்த சமூகத்துல ஒரே ஒரு விதி தான்,

நீ பணம் சம்பாதிச்சா இந்த சமுதாயம்

உன்ன மதிக்கும். இல்லேனா மதிக்காது....சிம்பிள்..


உனக்கு ஒரு சொந்த வீடு

இல்லேனா உன் கூட பிரச்சனை வரும். உன்

சொந்தக்காரங்க உன்ன மதிக்கமாட்டாங்க.

அப்பா, அம்மா, தங்கச்சி, தம்பி யாரும் உன்ன மதிக்கமாட்டாங்க.

உன் பொண்ணுக்கு பையன் குடுக்க மாட்டாங்க ..

பையனுக்கு பொண்ணு குடுக்க மாட்டாங்க


நான் எங்க போய் சம்பாதிக்கிறது?..

நான் யாருக்காக பணம் சம்பாதிக்கனும்? ..


18 உடை, சொந்த வீடு, 4 கார்,

மினரல் வாட்டர்,..

120ரூவாய்கு ஒரு குப்ப படம் எனக்கு

தேவகிடையாது.. அப்பொ அதெல்லாம்

யாரோட தேவ..எங்கையோ இருக்கற நாலு

மொதலாளி .. அவன நக்கி தின்ற

இங்க இருக்கற 4000 மொதலாளிங்க

உலகத்ல இருக்கற அத்தன பணக்கார

பன்னிகளும் கொழுத்து போறதுக்கு தேவ ஒரு

பெரிய மார்க்கெட்..


அந்த மார்க்கெட் தான் இந்தியா..


இங்க நம்ம டிவி ல 100 தடவ ஒரு விளம்பரம் போட்டானா அவன் சோப்ப நீ வாங்கித்தான் ஆகணும்.

வேற வழியே கெடையாது..

தெனம் தெனம் ஒழைச்சி ஒழைச்சி.. ஆச பட்டு ஆசப்பட்டு . தேவயில்லாத குப்பையெல்லாம் வாங்கி எதுக்கு வாங்கினோம்கிறதே மறந்துபோய் அடுத்தநாள் காலைல எந்திரிச்சி ஒழச்சி கொட்டனும்..அப்பதான் ஒலகத்துல இருக்குர அத்தன பணகாரங்களும் சந்தோஷமா இருப்பாங்க..

அவங்கள சந்தோஷமா வச்சிக்க தான் கடவுள் உன்ன படச்சிருக்காரு..

இது எல்லாத்தையும் புரிஞ்சிக்கிட்டு இந்த சமூகம் சொல்லிகுடுக்குற மாதிரி உன் தேவ எல்லாத்தையும் பூர்த்தி பண்ணிட்டேஏஏஏஏ செத்துப்போனாத்தான் அது ஒரு குடும்பம்... அப்பதான் இந்த சமூகம் அந்த குடும்பத்த ஏத்துக்கும்...

உன்ன இந்த சமுதாயம் ஏத்துக்கும்..


இது எல்லாத்தையும் ஒத்துக்கிட்டாதான் இந்த சமூகத்துல....

என்ன சொல்றது? ..ஆம்... சந்தோஷமா வாழ முடியும்....



No comments: